பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் முன்னாள் மனைவி மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
2022-01-03@ 17:51:27

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டிஷ் - பாகிஸ்தான் வம்சாவளியும், பத்திரிகையாளருமான ரேஹம் கானுக்கும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் பிரதமருமான இம்ரான் கானுக்கும் கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இருவருக்குமான உறவு 10 மாதங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், ரேஹம் கான் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, சிலர் என்னுடைய கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள், துப்பாக்கியுடன் பின்தொடர்ந்து வந்தனர். என் காரை நிறுத்த முயன்றனர். ஆனால், எனது பாதுகாவலர் மற்றும் டிரைவரின் முயற்சியால் தப்பித்தேன். இதுதான் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா? அவர்கள் கோழைகள், கொள்ளையர்கள், பேராசைபிடித்த மக்களின் நாடு.
நான் சாதாரண பாகிஸ்தான் குடிமக்களைப் போன்று வாழவும், இறக்கவும் விரும்புகிறேன். என் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்த அரசாங்கம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இம்ரான் கானை வெளிப்படையாக பலமுறை ரேஹம் கான் விமர்சித்துள்ளார். அதேபோல், தனது கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
கனடாவில் பயங்கரம்; வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;