முதுகுவலியால் அவதி!: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி திடீர் விலகல்..ரசிகர்கள் ஏமாற்றம்..!!
2022-01-03@ 16:10:16

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி திடீரென விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்சுரேலில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி, ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னரே கேப்டன் விராட் கோலி விலகல் தெரியவந்தது. அவருக்கு பதிலாக டாஸ் போட உள்ளே வந்த கே.எல்.ராகுல் இந்த தகவலை தெரிவித்தார்.
மேல் முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கோலி விளையாடவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் உடல் நலமடைந்து 3வது டெஸ்ட்டில் கோலி பங்கேற்கலாம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். கோலி விலகியதை அடுத்து கேப்டன் பொறுப்பை ராகுல் ஏற்றுள்ளார். அவர் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது ஹனுமா விஹாரி விளையாடிய அனுபவம் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள தொடரை வெல்ல இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் செய்திகள்
சில்லி பாயிண்ட்
இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
3வது சுற்றில் ஜோகோவிச்: கோன்டவெய்ட், ரூட் அதிர்ச்சி
லயன் அபார பந்துவீச்சு 212 ரன்னில் சுருண்டது இலங்கை
பி.வி.சிந்து முன்னேற்றம்
விருதுகளை அள்ளிய ஹூடா
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;