உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமையவுள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
2022-01-02@ 09:24:16

ரேபரேலி: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அமையவுள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 5 மாநில தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு தேசிய கட்சிகள் படையெடுத்து வருகின்றன. உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த தளத்தை மீட்டெடுக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும் செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீரட் நகருக்கு வருகை தருகிறார். அங்கு ரூ.700 கோடி செலவில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இது 540 விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் 540 விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டதாக இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பல்கலை. வேந்தர் ஆளுநர்தான் மாநில அரசுகள் பின்பற்றணும்: ஒன்றிய கல்வி அமைச்சர் பேட்டி
பினராயிக்கு எதிராக புகார் கூறியதால் சொப்னாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு
அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது
இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!