ஓமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து ஃப்ளோரொனா.. இஸ்ரேலில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன்முறையாக கண்டுபிடிப்பு!!
2022-01-01@ 14:11:16

ஜெருசலேம் : உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த 'ஃப்ளோரொனா' என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
இன்புளுயன்சாமேலும் செய்திகள்
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள்: புதிதாக 12 கண்டுபிடித்ததால் 92ஆக உயர்வு
உளவு பார்க்க சீனா அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பலூனைப் பார்த்து பதறும் அமெரிக்கா: சுட்டு வீழ்த்தினால் வெடித்து சிதறுமோ என அச்சம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!