இந்தியாவில் இதுவரை 1,431 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு : அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 கேஸ்கள்!!
2022-01-01@ 10:44:29

புதுடெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1431 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’, குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் ெதாற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1431 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 454 பேரும் டெல்லியில் 351 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்:
கேரளா 109
தெலங்கானா 62
குஜராத் 115
ராஜஸ்தான் 69
தமிழகம் 118
கர்நாடகா 34
ஆந்திர பிரதேசம் 17
மத்தியப் பிரதேசம் 9,
மேற்கு வங்கம் 17
ஹரியானா 37
ஒடிஷா 14
ஜம்மு காஷ்மீர் 3
உத்தரப்பிரதேசம் 8
சண்டிகர் 3
லடாக் 1
உத்தரகாண்ட் 4
ஹிமாச்சல் பிரதேசம் 1
மணிப்பூர் -1,
கோவா -1
பஞ்சாப் -1
அந்தமான் 2
ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 488 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!