காஞ்சி, விழுப்புரம் மீன்பிடி துறைமுகத்திற்கான டெண்டர் வௌியிட்டதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் மனு
2021-12-31@ 00:07:47

சென்னை: தமிழக மீன்வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் ஆகிய கழிவேலி நீர்பிடிப்பு பகுதிகளில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 235 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான என்.மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘துறைமுக கட்டுமான பணிக்காக விதிகளை மீறி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் பலனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 22 கோடியே 46 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். எனவே, டெண்டரை ரத்து செ்ய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘விதிகளுக்கு உட்பட்டு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:
Kanchi Villupuram Fishing Port Tender No Irregularities High Court Government Petition காஞ்சி விழுப்புரம் மீன்பிடி துறைமுக டெண்டர் விதிமீறல் இல்லை உயர் நீதிமன்ற அரசு மனுமேலும் செய்திகள்
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஐந்து நாள்கள் அடித்து வெளுக்கும் மழை: வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்; கண்காணிக்க 15 சிறப்பு குழுக்கள் அமைப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!