ஊத்துக்கோட்டையில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு
2021-12-30@ 01:03:13

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில், பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சம்சுதீன், முன்னாள் பேரூர் செயலாளர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஆ.சத்தியவேலு, ரவி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அன்புவாணன், ரவிக்குமார், கேவி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி திமுக உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற பேரூராட்சி வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்களை 15 வார்டுகளிலும் வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணைச்செயலாளர் பார்த்திபன், வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், நெடுஞ்செழியன், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம், கோல்டு மணி, ஜீவா, வக்கீல் சீனிவாசன், சாந்தி, ஏனம்பாக்கம் சம்பத், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி அமைப்பாளர் ரகீம் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!