திருவொற்றியூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு வாடகை வீடுகளை எடுத்து தங்க வைக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை
2021-12-30@ 00:07:12

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவொற்றி யூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இருப்பினும் வீடுகளை இழந்த மக்கள் அனைவரும், கூலித்தொழிலாளர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் இடங்களிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அப்பகுதியிலேயே அவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித்தர முன்வர வேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசே வாடகைக்கு வீடுகளை எடுத்து அவர் களை குடியமர்த்த வேண்டும். தற்போது தங்க இடமில்லாமல் தவிப்பதால் உடனடியாக வாடகை வீடுகளில் அவர்களை தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக சார்பில் களத்தில் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் உண்மை நிலை பற்றி கேட்டறிந்தோம். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:
Tiruvottiyur house Government of Tamil Nadu rental house Vijayakanth request திருவொற்றியூரில் வீடு தமிழக அரசு வாடகை வீடு விஜயகாந்த் கோரிக்கைமேலும் செய்திகள்
ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்