எங்களை மென்மேலும் அடிமைப்படுத்துகிறார்கள்!: ஆப்கானில் தலிபான் அரசுக்கு எதிராக பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
2021-12-29@ 15:50:35

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூலில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. முன்பு 1990ம் ஆண்டுகளில் இருந்தது போன்று அந்த அமைப்பினர் பெண்களுக்கு படிப்படியாக தடை விதித்து வருகின்றனர். மேலும், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகள் பலவும் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்டதூரம் பயணம் செய்யும் பெண்கள் தனியாக செல்லக்கூடாது என்றும் நெருங்கிய ஆண் உறவினர் ஒருவர் துணையுடன் பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தலையையும், முகத்தையும் மறைக்கும் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இசையை ஒலிக்க செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களை மென்மேலும் அடிமைப்படுத்தும் செயல் என குற்றம்சாட்டியுள்ள அந்நாட்டு பெண்கள், தாலிபன் அரசை கண்டித்து, தலைநகர் காஃபூலில் போராட்டம் நடத்தினர். பெண்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
மேலும் செய்திகள்
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
ஒருநாளுக்கான எரிபொருள் மட்டுமே உள்ளது; இலங்கையில் பள்ளிகள் மூடல்: போக்குவரத்து முழுவதும் முடங்கியது
வாடிகனில் பரபரப்பு போப் ராஜினாமா?
அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து
மகாபாரத இதிகாசத்தை இயக்கிய பிரபல நாடக இயக்குனர் மரணம்
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!