ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை: கொரோனா தொற்றோடு முடியாது பல நோய்கள் உருவாகலாம்
2021-12-29@ 02:25:53

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் மனித இனம் எதிர்கொள்ளும் கடைசி தொற்றுநோயாக இருக்காது. அடுத்தடுத்த பல தொற்றுநோய்களுக்கு நாம் தயாராக வேண்டும்’ என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் முறையாக டிசம்பர் 27ம் தேதி சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் கடைபிடிக்கப்பட்டது. தொற்றுநோய்க்கான விழிப்புணர்வு, எதிர்கொள்ள தயாராதல் போன்ற விஷயங்களை மக்களிடம் பரப்ப ஐநாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்தன. இந்த ஆண்டின் சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் மனித இனம் எதிர்கொள்ளும் கடைசி தொற்றுநோயாக இருக்காது. கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டே, அடுத்ததடுத்த தொற்றுநோய்களுக்கும் நாம் தயாராக வேண்டும். சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினத்தை கடைபிடிக்கும் இந்த சமயத்தில் அதற்கான விழிப்புணர்வை பரப்பி, வேண்டிய முதலீடுகளை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். தற்போதும் வாரத்திற்கு 50,000 பேர் பலியாகி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு நெகடிவ் வந்தால் ரோகித் களம் இறங்க வாய்ப்பு; பயிற்சியாளர் டிராவிட் கருத்து
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்