மறைந்த பழம்பெரும் நடிகை ருக்மணிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயல்வதாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக புகார்: தமிழக அரசு சொத்தாட்சியர் தகவல்
2021-12-29@ 00:30:50

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ம் ஆண்டு உத்தரவிட்டார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சொத்தாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணி அம்மாளுக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.
அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது, அதை சட்டவிரோதமாக 10 பேர் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு, கட்டிடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருவதாகவும் இடைக்கால நிர்வாகி கண்டறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கும் மன்சூர் அலிகான் முயற்சிப்பதையும் கண்டறிந்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது. இது தொடர்பாக மன்சூர் அலிகானுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:
Complaint to late legendary actress Rukmini actor Mansoor Alikhan Government of Tamil Nadu property மறைந்த பழம்பெரும் நடிகை ருக்மணி நடிகர் மன்சூர் அலிகானுக்கு புகார் தமிழக அரசு சொத்தாட்சியர்மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!