கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாறும் பாடத்திட்டம்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடவடிக்கை
2021-12-28@ 10:40:04

சென்னை: கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் இடையூறுகளை சரிசெய்யும் வகையில் பாடச்சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் கல்வித்துறை பெரும் தாக்கத்திற்கு ஆளானது. மாணவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2022- 23 கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக பாடத்திட்டங்கள், பாட புத்தகங்களை அனைத்து நிலைகளிலும் பகுப்பாய்வு செய்ய நிபுணர் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை இன்னும் சில நாட்களில் மறு பதிப்பிற்காக அனுப்பவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தேசிய கல்வி கொள்கை அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், 2023-24 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்