16வது கொரோனா தடுப்பூசி முகாம் கோத்தகிரியில் கலெக்டர் ஆய்வு
2021-12-27@ 12:39:22

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கோத்தகிரி மற்றும் ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தை பொருத்த வரை கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 16வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 254 மையங்களில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட கட்டபெட்டு, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஓரசோலை ஆகிய பகுதிகளில் நடந்த முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி, செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதனிடையே நேற்று 6710 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.இதன் மூலம், நீலகிரியில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
மேலும் செய்திகள்
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்காட்டில் 14 நாட்களில் மட்டும் 47 ஆயிரம் மதுபாட்டில் சேகரிப்பு
ராஜபாளையத்தில் அதிகாலையில் பரபரப்பு..ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ.: ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;