திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இசை பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
2021-12-27@ 00:54:14

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இசை பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் 25ம் தேதி வரை விநியோகம் செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது. சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்துக்களாகவும், 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகளுடன், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.1.2022. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறையினர் அதிரடி..!!
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்