சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
2021-12-27@ 00:26:43

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தங்க அங்கி, நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. நண்பகல் 12.15 மணியளவில் மண்டல பூஜை நடைபெற்றது.
மாலை 4 மணியளவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இதனால், 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடைந்தது. வரும் 29ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படும் நடை, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மண்டல பூஜையை தரசிக்க, சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு
இமாச்சலத்தில் மேக வெடிப்பு: 4 பேர் வெள்ளத்தில் மாயம்
வானிலை ரேடார் பழுது கொல்கத்தா திரும்பிய தனியார் விமானம்: விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ்
நுபுர் சர்மாவை கொன்றால் வீடு பரிசு அஜ்மீர் தர்கா மதகுரு கைது
‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்
பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!