இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது
2021-12-27@ 00:15:42

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு சொந்தமாக மிகப்பெரிய பண்ணை வீடு இருக்கிறது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சல்மான்கானின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர் இந்த பண்ணை வீட்டில் வைத்து உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை பன்வேல் பண்ணை இல்லத்தில் அவர்கள் கொண்டாடினார்கள். அப்போது நள்ளிரவு 3 மணிக்கு சல்மான்கானை பாம்பு ஒன்று கடித்தது. உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு விஷமுறிவு மருந்து கொடுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து சல்மான்கான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை கடித்த பாம்பு விஷத்தன்மை இல்லாதது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அதிக விஷம் கொண்ட பாம்பு கடித்திருந்தால் நிலைமை விபரீதமாகி இருக்கும். நல்லவேளையாக சல்மான்கான் உயிர் தப்பினார் என்று அவரது ரசிகர்களும், உறவினர்களும் கூறினர். இதுகுறித்து சல்மான்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று சல்மான்கான் தனது 56வது பிறந்தநாள் விழா கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
Tags:
Today is birthday actor Salman bitten by a snake இன்று பிறந்தநாள் நடிகர் சல்மான் பாம்பு கடித்ததுமேலும் செய்திகள்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்
இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி போனில் பேச்சு
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்
பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கோர்ட்டில் ஆர்யன் கான் மனு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்