சபரிமலையில் இன்று மண்டல பூஜை தங்க அங்கி ஐயப்பனை காண குவிந்த பக்தர்கள்
2021-12-26@ 01:36:55

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. இந்நிலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக நேற்று மாலை கொண்டு வரப்பட்ட தங்க அங்கி, ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று, பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜைக்கு பிறகு, இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படும். இத்துடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். 29ம் தேதி வரை 3 நாட்கள் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஜனவரி 14ல் மகர ஜோதி
சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tags:
Sabarimala today Mandala Puja gold robe devotees சபரிமலை இன்று மண்டல பூஜை தங்க அங்கி பக்தர்கள்மேலும் செய்திகள்
தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை : உடல்களை நாடு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர முயற்சி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி... 28 பேர் பலி!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!