நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் : இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!!
2021-12-24@ 10:51:04

சென்னை : திரைப்பட இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.மலையாள இயக்குனரான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திவர் இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன். நாளை நமதே உள்ளிட்ட 75 படங்களை இயக்கியுள்ளார்.சிறந்த திரைப்படங்களை இயக்கியதற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்,' எனத் தெரிவித்துள்ளார்.
Tags:
கமல்ஹாசன்மேலும் செய்திகள்
மின் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்... பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு!!
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;