வழக்கறிஞர் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
2021-12-24@ 00:02:32

சென்னை: வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், ஒரு பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் தனது உத்தரவில், இது சம்மந்தமான குற்ற வழக்கினை விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோ பதிவினை பரப்புவதற்கு தடை விதித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மேற்கூறிய வீடியோவை சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவிடவோ பரப்பவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். இதை மீறி செயல்படுபவர்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Lawyer Affairs Social Website Defamation Police Commissioner Shankar Jiwal Warning வழக்கறிஞர் விவகார சமூக வலைத்தள அவதூறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கைமேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;