சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கிற்கு கொரோனா தொற்று
2021-12-22@ 17:32:30

லண்டன்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக். 24 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த வாரம் முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்க அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன்பின்னர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. கடுமையான காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக, நான் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், சமீபத்தில் கோவிட்-19 சோதனை செய்ததில் பாசிட்டிவ் வந்துள்ளது.
நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். ஏனெனில் நான் மிகவும் கடுமையான அறிகுறிகளை (காய்ச்சல், வலிகள், சளி) அனுபவித்து வருகிறேன். நேரம் சிறப்பாக இல்லை என்றாலும் , ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான எனது தயாரிப்புகளின் இறுதி கட்டத்தில் இருந்ததால் நான் விடுவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை கடந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வேன், என தெரிவித்துள்ளார். இதேபோல் அபுதாபி சென்று திரும்பிய முன்னணி வீரர் ரபேல் நடாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி