நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
2021-12-22@ 00:06:23

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணி தலைமை வகித்தார். மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மறைமலைநகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் பாரபட்சமில்லாமல் கடுமையாக உழைத்து, அனைத்து வார்டுகளிலும் கூட்டணி கட்சிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என பேசினார். இதில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசுதனன், முன்னாள் எம்எல்ஏ டி.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், சிறுபான்மை அணி செயலாளர் ஆல்பர்ட், நகர துணை செயலாளர்கள் முத்து, சீனுவாசன், வனிதா சுரேஷ், நகர பொருளாளர் முருகேசன், இளைஞரணி டி.கே.கமல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் முருகன், ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதிகள் சர்தார் பாஷா, கணேஷ்பாபு, பேரூர் துணை செயலாளர்கள் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்காக திமுக தீவிர தேர்தல் பணியாற்றி, அனைத்து வார்டுகளிலும் கூட்டம் நடத்த வேண்டும். என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், சிறப்பு மாவட்ட பிரதிநிதி தாமோதரன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Urban Local Election AIADMK Deposit Minister Thamo Anparasan Speech நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக டெபாசிட் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சுமேலும் செய்திகள்
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!