பாக். அமைச்சர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
2021-12-21@ 18:33:45

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஷிப்லி பராஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் ஷிப்லி பராஸ் காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.
அதே சமயம் இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் ஷிப்லி பராஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எனது கார் ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!