யூடியூபை பார்த்து செய்யும் விஷயமல்ல மகப்பேறு விஷயத்தில் சாகசம் செய்ய கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
2021-12-21@ 00:05:16

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக்கூடிய விஷயமாகும். யூட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது. யூட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இரட்டை இலை சின்னம் பெற இறங்கி வந்த ஓபிஎஸ்: கடிதத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி..!
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டி யஷ்வந்த் சின்கா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக எடப்பாடிக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது: பெங்களூர் புகழேந்தி கடிதம்
மாவட்ட செயலாளர்கள் உட்பட 99 % பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தகவல்
திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;