காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்த பெண் ஊழியர்கள்
2021-12-20@ 02:39:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பெண் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை முதல் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட தரமற்ற உணவால் உடல் உபாதைகள் ஏற்பட்டு பலர் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
ஆனால், ஒரு சிலர் திரும்பவில்லை எனும் எழுந்த சர்ச்சையால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் மாலை வரை பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையெடுத்து மாவட்ட கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தங்கள் உடமைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல காஞ்சிபுரம் பஸ் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.
விழுப்புரம் கடலூர், நாகை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கும் செல்ல அதிகளவிலானோர் குவிந்ததால் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அவர்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்படுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் செய்திகள்
நடிகை பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை தடயவியல்; பரிசோதனைக்கு அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை - மேட்டுப்பாளையம், தாம்பரம் உள்ளிட்ட 4 சிறப்பு ரயில்களை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முடிவு: ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பு
நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா
குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டிகளுக்கு நடைபயிற்சி அளிக்கும்; 10 யானைகள்
குழந்தை பாக்கியம் தரும் மருத்துவ குணம் வாய்ந்தது; குன்னூர் பர்லியார் பண்ணையில் துரியன் பழம் சீசன் துவங்கியது
இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால், தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!