பெரிய பாதையும் திறப்பு சபரிமலையில் நாளை முதல் நெய்யபிஷேகத்துக்கு அனுமதி
2021-12-20@ 02:25:30

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை முதல் பெருவழிப்பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த நிபந்தனைகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நாளை (21ம் தேதி) முதல் பெருவழிப்பாதையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு
பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு
அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!