குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்: டிசம்பர் 22ல் சேவை துவங்கும்?
2021-12-20@ 00:58:16

குன்னூர்: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதை ஆடர்லி அருகே கடந்த அக்டோபர் 23ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்ததால், மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும் மலை ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது நிலச்சரிவு, பாறைகள் விழுவது அதிகரித்துள்ளது. மீண்டும் கல்லார் அருகே பாறைகள், கற்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதம் ஏற்பட்டது. பாறைகளை அகற்றி தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வரும் 21ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 22ம் தேதி முதல் மலை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்