அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றவில்லை நிதித்துறை கட்டடத்திற்குதான் பேராசிரியர் பெயர் சூட்டியுள்ளோம்: ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு அமைச்சர் தங்கம்தென்னரசு கண்டனம்
2021-12-20@ 00:02:14

சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தொடக்கமாக, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. சென்னை நந்தனத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டடத்திற்குத்தான் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்திற்கு கலைஞர் மாளிகை என பெயரிடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் காழ்ப்புணர்ச்சியோடு கலைஞரின் பெயரை அடியோடு அகற்றிவிட்டதை வசதியாக மறந்து விட்டு இன்றைக்கு நடைபெறாத ஒன்றிற்காக அறிக்கை விட்டு இருப்பது வெட்கக்கேடாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:
Mother Campus Finance Building Professor Name OBS EPS Minister Goldsmith Condemnation அம்மா வளாகம் நிதித்துறை கட்டட பேராசிரியர் பெயர் ஓபிஎஸ் இபிஎஸ் அமைச்சர் தங்கம்தென்னரசு கண்டனம்மேலும் செய்திகள்
அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை
இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!