உபி.யில் மாபியாவால் மக்கள் அஞ்சி நடுங்கிய காலம் மலையேறி விட்டது: பிரதமர் மோடி பேச்சு
2021-12-19@ 01:52:35

ஷாஜகான்பூர்: ‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சாமானிய மக்கள் அஞ்சி நடுங்கிய காலங்கள் மலையேறி விட்டது’ என பிரதமர் மோடி பேசினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்பாக, அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். சமீபத்தில் வாரணாசியில் ரூ.339 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார். இந்நிலையில், இம்மாநிலத்தில் ஷாஜகான்பூரில் 594 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள கங்கா விரைவுச் சாலைக்கு நேற்று அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஆட்சியில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நிலவிய சட்டம் ஒழுங்கு நிலைமையை நீங்கள் அறிவீர்கள். இங்கு சூரியன் மறைந்ததும், சமூக விரோதிகள் கைகளில் நாட்டு துப்பாக்கிகள் தவழ ஆரம்பிக்கும். பொதுமக்ககள் வீட்டை விட்டு வீதிக்கு வருவது, தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வதற்கு சமமாக இருந்தது. யோகி ஆட்சியில் நாட்டு துப்பாக்கி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாபியாக்களை மாநில அரசு அடக்கி ஒடுக்கியுள்ளது. மாபியாக்களின் மோசடி சொத்துக்கள் புல்டோசர்களால் அழிக்கப்பட்டுள்ளன. இது அவர்களை ஆதரவளிப்பவர்களுக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை சில அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. ஏனெனில், அவர்கள் தங்களின் வாக்குகளைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள். கங்கை நதியை சுத்தம் செய்வதை எதிர்க்கும் அவர்கள், தீவிரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து கேள்வி கேட்கின்றனர். காசி விஸ்வநாதர் கோயில் வளாகம், ராமர் கோயில் போன்றவை கட்டப்படுவதிலும் கவலை கொண்டவர்கள் அவர்கள். இன்று யோகி ஆட்சியில் உபி முன்னேறும் போதும் நாடும் முன்னேறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டிலேயே மிக நீளமானது
* கங்கா விரைவுச்சாலை ரூ.36,230 கோடியில் 6 வழிச்சாலையாக கட்டப்படுகிறது. இதை 8 வழிச்சாலையாக விரிவாக்கமும் செய்ய முடியும்.
* இந்த சாலை மீரட்டில் தொடங்கி 12 மாவட்டங்கள் வழியாக பிரயாக்ராஜை அடைகிறது. டெல்லியையும் பிரயாக்ராஜையும் நேரடியாக இணைக்கிறது. இதன் மூலம், டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ்க்கு 7 மணி நேரத்தில் வர முடியும். இதுவே, நாட்டின் மிக நீண்ட விரைவுச்சாலையாக இருக்கும்.
* இதில் ஷாஜகான்பூரில் 3.5 கிமீ தூரத்திற்கு போர் விமானங்கள் இறங்கக் கூடிய விமான ஓடுபாதை அமைக்கப்பட உள்ளது.
* முன்னதாக உபியில் திறக்கப்பட்ட பூர்வாஞ்சல் விரைவுச்சாலையிலும் போர் விமானங்கள் தரையிறக்குவதற்கான விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!