SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானில் 8 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 20 பேர் பலி?

2021-12-18@ 00:48:54

டோக்கியோ: மேற்கு ஜப்பானின் ஒசகாவின் கிடாசின்சி பகுதியில் 8 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மருத்துவமனை,  பள்ளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென நான்காவது மாடியில் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால், சிகிச்சை பெற வந்தவர்கள் உட்பட ஆங்காங்கே இருந்தவர்கள் என அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனிடையே தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்தனர்.

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 27 பேர் மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஜன்னல் வழியாக மீட்கப்பட்ட இவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 70 தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி  தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், எத்தனை பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்