குன்னூரில் ஆறு, ஓடைகள் கணக்கெடுக்கும் பணி
2021-12-17@ 13:53:20

குன்னூர் : குன்னூரில் வருவாய் துறை சார்பில் ஆறுகள் மற்றும் ஓடைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படவில்லை. இதனால், வீடுகள் மற்றும் மார்க்கெட் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் குன்னூரில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் நேரடியாக கலந்து வருவதால் நீர் மாசடைந்து வருகிறது. இதேபோல், ஆறுகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாமல் சேதம் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், குன்னூரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வருவாய் துறை சார்பில் ஆறுகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது.
இதில், குன்னூரில் மட்டும் ஆறுகள் மற்றும் ஓடைகளின் எண்ணிக்கை 719. இதனை முதற்கட்டமாக டிஜிட்டல் கருவிகள் மற்றும் வரைபடங்கள் வைத்து ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வு அறிக்கைகள் விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும், குன்னூர் மாடல் ஹவுஸ், ரேலி காம்பவுண்ட், டானிங்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிட பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்