முஸ்லிம்கள் பற்றி அவதூறு யூடியூபர் மாரிதாஸ் கைது
2021-12-17@ 00:38:29

நெல்லை: முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாசை நெல்லை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியாகினர். இது குறித்து அவதூறு பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் மற்றொரு புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நிர்வாக காரணங்களுக்காக அவர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில், மேலப்பாளையம் பங்களாப்பா பகுதியைச் சேர்ந்த தமுமுக உறுப்பினர் முகம்மது காதர் மீரான், யூடியூபர் மாரிதாஸ் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பேசி பதிவிட்டிருந்ததாக கடந்த 4-4-2020ல் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் மேலப்பாளையம் போலீசார், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்புவது, மத மோதலை உண்டாக்குவது, ஒற்றுமையை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு தேனி மாவட்ட சிறைக்கு சென்று யூடியூபர் மாரிதாசை கைது செய்தனர். அவரை நேற்று மதியம் நெல்லை ஜேஎம் 5வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி, வரும் 30ம்தேதி வரை மாரிதாசை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் மாரிதாசை நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தேனி மாவட்ட சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம் கழுத்தறுத்து மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
பங்கில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கறிஞர் உள்பட இருவர் கைது: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு
வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
மண்ணூர் கிராமத்தில் கஞ்சா: வடமாநில இளைஞர் கைது
கூடுவாஞ்சேரி அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரியின் வீட்டை உடைத்து 32 சவரன் கொள்ளை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;