காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிபின் ராவத்துக்கு பிரம்மாண்ட கட் அவுட்: மரியாதை செலுத்திய தலைவர்கள்!!...
2021-12-16@ 18:06:32

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவதிற்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை பெருமைப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிபின் ராவதின் புகைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொது கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேச வெற்றி விழாவிற்கான அழைப்பிதலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படாததை சுட்டிக்காட்டியதுடன், ஒன்றிய அரசு உண்மையை கண்டு அஞ்சுவதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா காந்தி வங்கதேச வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்களில் இந்தியாவில் ஒரே பெண் பிரதமர் பாஜக - வால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த நாட்டில் பெண்கள் உங்களுக்கு உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!