SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டொமினிக்கன் குடியரசு நாட்டில் ஓடுபாதையிலேயே விமானம் விழுந்து விபத்து!: 2 விமானிகள் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பலி..!!

2021-12-16@ 10:08:50

டொமினிக்கன்: டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமானம் ஓடுபாதையிலேயே விழுந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஃபுளோரிடாவில் இருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இஸபெல்லா நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று தலைநகர் சான் டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிடோச அவியேஷன் குழுமத்திற்கு சொந்தமான இந்த விமானம் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலேயே விழுந்தது.

இந்த விபத்தில் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். பயணிகளில் ஒருவர் மட்டுமே டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர். எஞ்சிய 6 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஹெலிடோச அவியேஷன் குழுமம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்