இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6-ஆக பதிவு
2021-12-14@ 10:16:04

ஜகார்தா : இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மேலும் செய்திகள்
சீனா - இலங்கை நட்பு பலப்படும்: சீன உளவு கப்பல் கேப்டன் கருத்து
நாங்களும் யூஸ் பண்ணுவோம்ல... குரங்குகளும் விதி விலக்கல்ல
60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா: தொழிற்சாலைகளை மூட உத்தரவு
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இளைஞர்; அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகள்: தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது: அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக அறிவிப்பு..!!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!