ஒமிக்ரான் வைரஸ்..! குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவை; உலக சுகாதார அமைப்பு தகவல்
2021-12-12@ 12:20:43

நியூயார்க்: ஒமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனாவின் மற்றொரு பிரிவான ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது.
ஒமிக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வரும் நிலையில், தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறும்போது, கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது.
தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஒமிக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம். நோய்த்தொற்றினால் கடுமையான பாதிப்பினை எதிகொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது. மேலும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. என்று கேட்ரபால் கூறினார்.
மேலும் செய்திகள்
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!