அறநிலையத்துறை செயல்அலுவலர்கள் பணி மாறுதலுக்கு வழிகாட்டி நெறிமுறை: ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டார்
2021-12-12@ 01:14:17

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களை பணியிட மாறுதல் செய்வது மற்றும் விருப்ப மாறுதல் அளித்துள்ள செயல் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது குறித்து இணையவழியில் கலந்தாய்வு வரும் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது.
அதன்படி, இந்த இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள ஏற்கனவே நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் தற்போதைய பணியிடத்தில் பணியில் சேர்ந்து கட்டாயம் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகிய இருபிரிவினருக்கு மட்டும் இதில் விலக்களிக்க பரிசீலிக்கப்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து செயல் அலுவலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரே இணை ஆணையர் பிரிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரியும் நிலை 1 மற்றும் 2 செயல் அலுவலர்களுக்கு அதே இணை ஆணையர் பிரிவில் பணிமாறுதல் வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே பணிபுரிந்த கோயில்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட மாட்டாது.
* கணவன், மனைவி பணியாற்றும் இடத்திற்கு மாறுதல் கோரும்பட்சத்தில் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறாரோ அந்த உதவி ஆணையர் சரகத்திற்கு மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு கருத்தில் கொள்ளப்படும்.
* ஏற்கனவே நிலை 1, 2 மற்றும் 3 செயல் அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் வேறு பணியிடம் கோரி அளித்துள்ள விண்ணப்பங்கள் முதுநிலை அடிப்படையிலேயே இணைய வழி கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
Tags:
Charitable Trusts Executive Officers Transfer Guide Commissioner Kumarakuruparan அறநிலையத்துறை செயல்அலுவலர்கள் பணி மாறுதலுக்கு வழிகாட்டி ஆணையர் குமரகுருபரன்மேலும் செய்திகள்
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது
திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கட்கிழமை விசாரணை; ஐகோர்ட் அனுமதி
இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் 12ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்படும்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்