ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் 200 ஜவுளி கடைகள் அடைப்பு
2021-12-10@ 16:33:06

ஈரோடு: ஜவுளி ரகங்களுக்கு வரி விதிப்பை 5%- லிருந்து 12%- மாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நூல் விலை மற்றும் மூல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் மேலும் பாதிக்கப்படும் என ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஈரோட்டில் மொத்த ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ஜவுளி விற்பனை நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று ஒருநாள் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கரூர் மாநகராட்சி உட்பட்ட காமராஜபுரம், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணாபுரம், மகாத்மா காந்திசாலை ஆகிய பகுதிகளில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள சுமார் 200 கடைகள் மூடப்பட்டுள்ளன. வரி உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜவுளி வணிகர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தினர் . அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தவும் ஜவுளி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Tags:
வரி விதிப்பு 5%_ லிருந்து 12% ஒரு நாள் கடை அடைப்பு ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் பாதிக்கப்படும் கரூர் மாநகராட்சி உட்பட்ட காமராஜபுரம் செங்குந்தபுரம் ராமகிருஷ்ணாபுரம் மகாத்மா காந்திசாலை 200 கடைகள் மூடப்பட்டுள்ளன தொடர் போராட்டம்மேலும் செய்திகள்
பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
கரூர் திருமாநிலையூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தனிவிமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதல்வர் முக.ஸ்டாலின்
சாத்தான்குளம் அருகே விஷம் வைத்து 20 கோழிகள் சாகடிப்பு
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருவேங்கடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராஜபாளையம் தொகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காட்பாடியில் சீரமைப்பு பணி முடிந்தது ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்