பள்ளிக்கரணையில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2021-12-10@ 11:46:49

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். 2.5 ஹெக்டேர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த சதுப்பு நில பகுதியில் 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நில நீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஒட்டுமீன் இனங்கள் என பல்வேறு உயிரினங்கள் இருக்கக்கூடிய பகுதி.
2020 - 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 41,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்கும் வகையில் 42 வகையான உள்நாட்டு தாவிர வகைகள் மற்றும் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு தாம்பரம் வேளச்சேரி நெடுஞ்சாலையில் சதுப்பு நிலத்தின் எல்லையில் 1700 மீ நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்துள்ளார். சென்னை மாநகராட்சியின் குப்பை மேடாக இருந்த பகுதி முழுமையாக சீரமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
Tags:
சுற்றுச்சூழல் பூங்காமேலும் செய்திகள்
சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி
காலில் லுங்கி மாட்டி கீழே விழுந்தவர் பலி
பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் குடமுழுக்கு விரைவில் நடைபெறும்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இனி நான் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி டுவிட்டர் பக்கம் மாற்றம்
ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 1.50 லட்சம் ஒப்படைப்பு; டிரைவருக்கு பாராட்டு
மருத்துவமனையில் உள்ள சகோதரனை பார்க்க அனுமதி மறுப்பு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற; போதை வாலிபர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்