ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திட உறுதியேற்போம்: உலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2021-12-10@ 10:58:24

சென்னை: சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமைத் தத்துவமாகும். 1948-ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோமோ, அதுபோல நாம் மற்றவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.
அவ்வகையில் All Human, All Equal என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா., அவை அறிவித்துள்ளது. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் 'யாவரும் கேளிர்' என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது.
இதைத்தான் ‘சுயமரியாதை’ எனும் பெயரில் இந்த தமிழ் மண் அரசியல் - சமூக - பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:
மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!