SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மரில் கிராம மக்கள் 11 பேர் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம்.. ஐ.நா.கடும் கண்டனம்; மனிதாபிமற்ற செயல் என அமெரிக்கா எதிர்ப்பு!!

2021-12-10@ 08:37:17

மியான்மர் : மியான்மரில் கிராம மக்கள் 11 பேர் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் வடமேற்கில் உள்ள சாகயிங் பகுதியில் டோன் டா என்ற கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் 11 பேரின் கை கால்களை கட்டி உயிருடன் எரித்து கொன்றுள்ளனர். இது குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி வழியே என்ற ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு.  பழி தீர்க்கும் வகையில் ராணுவம் 11 பேரை உயிருடன் எரித்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படுகொலைக்கு காரணமாக ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.செய்தித் தொடர்பாளர், மியான்மரில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது. அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராணுவத்தால் சுடப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலை கண்டிக்கிறோம். மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை உள்ளது,' என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்