7வது குழந்தைக்கு தந்தையானார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ்
2021-12-10@ 00:01:18

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவிப்பத்தில் பிரதமரும், அவரது மனைவியும் மகிழ்ச்சி அடைகின்றனர். தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் போரிசுக்கு பிறந்துள்ளது ஏழாவது குழந்தையாகும். பிரதமரது முதல் மனைவி அல்ஜீராவிற்கு குழந்தைகள் கிடையாது. பிரதமர் போரிஸ், தனது கலை ஆலோசகர் ஹெலன் மெகிண்டருடான உறவின் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பின் இந்திய வம்சாவளியை சேர்ந்த மரினா வீலர் என்பவரை போரிஸ் ஜான்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். அவரை விவாகரத்து செய்த பின் கேரியை பிரதமர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஜி-7 நாட்டு தலைவர்கள் துணியின்றி இருந்தால் பார்க்கவே சகிக்காது; புடின் பதிலடி
நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு நெகடிவ் வந்தால் ரோகித் களம் இறங்க வாய்ப்பு; பயிற்சியாளர் டிராவிட் கருத்து
பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல் போராட்டம்
இங்கிலாந்தில் 1,076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
உக்ரைனில் பல்பொருள் அங்காடி மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புதின் ஒரு பயங்கரவாதி: ஜெலன்ஸ்கி சாடல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்