குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. விமானப்படை தளபதி நேரில் ஆய்வு; கருப்பு பெட்டி மீட்பு; பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து ராஜ்நாத் சிங் இன்று விளக்கம்!!
2021-12-09@ 10:02:05

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் இயக்கும் தகுதியில் இருந்ததா? அதை பயன்படுத்த அனுமதி வழங்கிய ராணுவ அதிகாரி யார்? தொழில்நுட்ப குழுவின் ஒப்புதல் இல்லாமல் அபாயகரமான பனி மூட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் எப்படி இயக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த உயர் மட்ட விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.செளத்ரி, உயரதிகாரி ஜோஷி ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கருப்பு பெட்டி மீட்பு!!
சூலூர் விமான படை தள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் , காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் அறிக்கை
மேலும் விபத்து தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார். அப்போது ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு; ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல்
மேகாலயா சட்டசபை தேர்தல்: 60 சிட்டிங் எம்எல்ஏ உட்பட 379 பேர் வேட்புமனு தாக்கல்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத டபுள் டக்கர் இ-பஸ் சேவை ஐதராபாத்தில் தொடக்கம்: பயணிகள் உற்சாகம்
மகளின் திருமணத்திற்கு கோட்டையை புக்கிங் செய்த ஒன்றிய அமைச்சர்: ராஜஸ்தானில் தடபுடல் ஏற்பாடு
மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!