உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல்.. தொடர்ந்து 3வது ஆண்டாக இடம் பிடித்த நிர்மலா சீதாராமன்!!
2021-12-09@ 08:12:44

புதுடெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2ம் இடத்திலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 37வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வருடம் தொரும் வெளியிட்டு வருகிறது.
இதன்படி, இந்தாண்டு 18-வது முறையாக ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் ‘ஃபோர்ப்ஸ் - 2021’ உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து 3வது ஆண்டாக இடம்பெற்றுள்ள மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்தாண்டு 41வது இடத்தையும், 2019ம் ஆண்டு 34வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதனைபோன்று, இந்தியாவின் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான ரோஷ்னி நாடார் 52 வது இடத்தில் உள்ளார். 72 வது இடத்தில் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, 88வது இடத்தில் சமீபத்தில் ஐபிஓ-வில் கலக்கிய நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் ஆகியோர் உள்ளனர்.
உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 பெண்கள்
01. நன்கொடையாளர் மெக்கென்சி ஸ்காட்
02. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
03. ஐரோப்பிய ரிசர்வ் வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட்
04. ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஓ. மேரி பார்ரா
05. நன்கொடையாளர் மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ்
06. பிடிலிட்டி இன்வென்ஸ்மெண்ட்ஸ் சி.இ.ஓ. அபிகாயில் ஜான்சன்
07. சான்டாண்டர் செயல் தலைவர் அனா பாட்ரிசியா போடின்
08. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்
09. தைவான் அதிபர் சாய் இங் வென்
10. அசென்சர் சி.இ.ஓ. ஜூலி ஸ்வீட்
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலிய பிரதமராக அல்பானீஸ் பதவியேற்பு
பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி
தைவானை பாதுகாக்க சீனாவுடன் போருக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது சட்டத்திருத்தம் தாக்கல்: இலங்கை பிரதமர் ரணில் தகவல்
ரஷ்ய பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார் அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவலால் பரபரப்பு
உலகம் முழுவதும் 10 கோடி பேர் அகதிகளாகினர்: ஐநா அதிர்ச்சி தகவல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை