உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு தகவல் பொய்யானது
2021-12-09@ 00:15:41

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு இருக்கிறது என்ற தகவல் பொய்யானது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி நீரை தேக்க வேண்டும் என்ற முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தவிட்டுள்ளது. இந்த நிலையில் சேவ் கேரளா மற்றும் பிரிட்ஜ் கேரளா என்ற அமைப்பு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் மற்றும் உமாபதி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில்,‘‘அணையில் நீர்கசிவு ஏற்படுவதாக மனுதாரர் கூறும் கூற்று பொய்யானது. முல்லைப் பெரியாறு அணையில் 50 லட்சம் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர் என கூறுவதும் பொய்யாகும். மேலும் அணையில் 142 அடி நீரை தேக்கினாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் அணைக்கு பெருவெள்ளம், நில அதிர்வு உள்ளிட்ட இயற்கை இடர்களை தாங்கும் வலிமை உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் பிரதான மனுதாரரான ஜாய் ஜோசப் உட்பட முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tags:
Supreme Court Government of Tamil Nadu Petition Mullaiperiyaru Dam Water Leakage உச்ச நீதிமன்ற தமிழக அரசு மனு முல்லைப் பெரியாறு அணை நீர் கசிவுமேலும் செய்திகள்
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!