செல்வந்தர்கள் அதிகரித்து, ஏழைகள் நிரம்பிய சமத்துவமற்ற நாடு இந்தியா: 22% சொத்துக்கள் 1% பேரிடம் குவிந்துள்ளது..ஆய்வில் தகவல்
2021-12-08@ 15:53:53

டெல்லி: இந்தியாவில் ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 22 சதவீதம் ஒரு சதவீத மக்களிடம் இருப்பதாகவும் உலக சமத்துவமின்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பின்பு ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக மாற்றத்தில் அதிகப்படியான நடுத்தர மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டு உள்ளனர். பல வர்த்தகம், வேலைவாய்ப்பு இழந்து மோசமான நிலைக்கு சென்று இன்றளவும் மீள முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், உலக சமத்துவமின்மை தரவுத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் மக்களிடையே சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில் சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் 2.04,200 ரூபாயாக இருப்பதாகவும், அதில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் வெறும் 53,610 ரூபாயாக இருப்பதாகவும், 10 சதவீத மக்கள் 20 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதாகவும் அதாவது ஆண்டுக்கு 11,66,520 ரூபாய் வருமானம் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில், 22 சதவீத தொகை, 1 சதவீத மக்களிடமே குவிந்திருப்பதாகவும், 10 சதவீத மக்களிடம் 57 சதவீத வருமானம் இருப்பதாகவும், 50 சதவீத மக்களிடம் வெறும் 13 சதவீதம் வருமானம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாக தெரியும் நாடாகவும் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பண இருப்பவர்கள் மற்றும் பண இல்லாதவர்கள் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்கிறதோ, அதே அளவிற்கு இருதரப்பு மத்தியிலான இடைவேளையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியாவில் பாலின சமத்துவமின்மையும் அதிகமாக உள்ளது.
மேலும் செய்திகள்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி
கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை: காதலன் தலைமறைவு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!