தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
2021-12-08@ 14:30:06

சென்னை : தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழறிஞர் புலவர் செ. இராசு அவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவிடும் வகையில் அவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டமைக்கு ரூபாய் 15 இலட்சமும் மற்றும் மறைந்த தமிழறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன் மற்றும் புலவர் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 இலட்சம் ரூபாய், தமிழறிஞர்கள் திரு. முருகேச பாகவதர் மற்றும் திரு. சங்கரவள்ளி நாயகம் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய், என மொத்தம் 80 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்