ஆபத்தை உணராத இளைஞர்கள் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாறிய ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை
2021-12-08@ 14:02:02

நெல்லை : நெல்லையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களின் விபத்து ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் ‘செல்பி’ ஸ்பாட்டாக மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான்கு வழிச்சாலை பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
நெல்லை வழியாக கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டி மலையை இரண்டாக பிளந்து அமைக்கப்பட்டுள்ளது. ரெட்டியார்பட்டி மலையின் நடுவே சாலை அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி ரெட்டியார்பட்டி மலைச்சாலையின் அழகை ரசிக்காமல் செல்வதில்லை. இந்த இடத்தில் சில சினிமா படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மலை உச்சியில் காட்சி கோபுரம் அமைத்து சுற்றுலா தலமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சாலையின் சென்டர் மீடியனில் செவ்வரளி பூக்களுடன் பச்சைபசேல் என காணப்படும் செடிகள் உள்ளன. இதன்காரணமாகவே சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் வாகனங்களை நிறுத்தி அழகான சாலை மற்றும் மலையுடன் சேர்த்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் அமைத்து வருகின்றனர். சாலை பளபளப்பதால் வாகனங்கள் அதிவேகமாக பயணிக்கின்றன. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் செல்பி எடுக்க, ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர்.
சாலையை கடக்கும் போது சென்டர் மீடியன்களில் ஆள் உயரம் வளர்ந்துள்ள அரளி செடிகளால் சாலையை கடந்து வருபவர்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.எனவே ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தில் இளைஞர்கள் இங்கு குவிவதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை