தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பொங்கல் முதல் 3வது ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
2021-12-08@ 10:01:41

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதையில் பொங்கல் முதல் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் முடிவு பொங்கல் பரிசாக வந்துள்ளதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதன்படி 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பாதையில் சிக்னல் மற்றும் மின்மயமாக்கப்பட்ட பணிகளும், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவாக்க பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இருப்பு பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டதை அடுத்து பொங்கல் முதலாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3வது ரயில் பாதையில் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய வழித்தடத்தால் காத்திருப்பு நேரம், கூட்ட நெரிசல் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!