பணத்தை பறித்த கொள்ளையன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
2021-12-08@ 00:06:18

நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கி காலசாரம் அதிகமாகி விட்டது. கொலை, கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, மர்ம நபர்களால் இந்தியர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கேரள இளம்பெண்ணை மேல் மாடியில் வசிக்கும் நபர் சுட்டுக் கொன்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இரண்டு இடங்களில் காஸ் நிலையம் வைத்திருப்பவர் அமித்குமார் படேல். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், வார இறுதி நாட்களில் காஸ் நிலையத்தில் வர்த்தகமாகும் பணத்தை திங்களன்று வங்கியில் செலுத்துவது வழக்கமாகும்.
இதேபோல், நேற்று முன்தினமும் அமித் குமார் பணத்தை டெபாசிட் செய்வதற்காக அருகில் இருந்த வங்கிக்கு சென்றார். அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்ம நபர், வங்கி வாசலில் அமித்குமாரிடம் இருந்த பணத்தை பறிக்க முயற்சித்தார். அப்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அமித்குமாரை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழ, பணத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர் தப்பி சென்றார். காலை பத்து மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அருகிலேயே காவல் நிலையம் அமைந்திருந்தும் இதுபோன்ற துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.71 கோடி ஆக உயர்வு!!
திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்
2 வாரங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசரநிலை வாபஸ்: மாணவர்கள் பேரணியில் தடியடியால் பரபரப்பு
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்