கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் வாகனங்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல்: டிஐஜியிடம் புகார்
2021-12-08@ 00:05:58

காஞ்சிபுரம்: லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல் மோகன்தாஸ் தலைமையில் சந்திரன், சுரேஷ் ஆகியோர், டிஐஜி சத்தியப்பிரியாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் மதூர், ஆற்பாக்கம், படப்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகளும், எம்சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களுக்கு எம்சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
அதுபோல் செல்லும் லாரிகளை, லாரி உரிமையாளர் சங்கத்தினர் எனக் கூறி, பல்வேறு இடங்களில் வழிமறித்து சிலர் பணம் பறிக்கின்றனர். மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி, பாரத்துக்கு ஏற்றபடி பணம் பறிப்பதுடன், லாரி ஓட்டுனர்களையும் அடித்து உதைத்து, லாரிகளை சிறைப்பிடிக்கின்றனர். எனவே, கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம் என கூறி, பணம் பறிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி. சத்யபிரியா உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
கடந்த நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.760 கோடி
ராமேஸ்வரம் மீனவ பெண் கொலையில் ஒடிசா இளைஞர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு
புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!